Author

K Pramasivan

K Pramasivan

பரமசிவம் (1933-1992) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1957 முதல் 1988 வரை தமிழ்த்துறையில் பேராசிரிய ராகப் பணியாற்றினார். அதன்பிறகு இந்தியவியலைக் கற்பிக்கும் அமெரிக்க நிறுவனத்தில் (அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டியன் ஸ்டடீஸ்) இயக்குநராகப் பதவியேற்று தமது இறுதி காலம் வரை பணிபுரிந்தார். இவர் எழுதிய கட்டுரைகள் பல ஆய்விதழ்களிலும் செந்தமிழ்ச் செல்வி எனும் இலக்கிய இதழிலும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள இலக்கியத் தொகை நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. இவருடைய முனைவர் பட்ட ஆய்வை திருவனந்தபுரத்தில் உள்ள திராவிடர் மொழியியல் கழகம், Effectivity and causativity in Tamil (1979) எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தங்கியிருந்த ஐந்தாண்டுகளில் முனைவர் கு.ப. அவர்கள் அங்குள்ள சிகாகோ, விஸ்கான்ஸின் மற்றும் பெர்க்கிளி பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பித்தார். அதன் விளைவாக, அமெரிக்க மொழியியல் பேராசிரியரான ஜேம்ஸ் விண்டுஹோம் அவர்களுடன் இணைந்து Basic Tamil Reader and Grammar 1980) என்னும் நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டார். இன்றளவும் அந்நூல்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்போருக்கான பாட நூல்களாய் இருந்து வருகின்றன. . நூல்களுள் இக்காலத் தமிழ் மரபு, இக்கால மொழியியல் அறிமுகம் ஆகியன மரபிலக்கணத்திலும் மொழியியலிலும் தெளிவுடைய இவர் எழுதிய சார்ல்ஸ் டிக்கன்ஸ் முதலானவர்களின் இருபதுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற மேற்கத்திய எழுத்தாளர்களான ஜேன் ஆஸ்டின், ஆங்கில நாவல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். குறிப்பிடத்தக்கவை.l